தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 6, கடந்த மாதம் 9ம் திகதி ஆரம்பமாகியது.
முதல் வாரம் 20 நபர்கள், அதன்பின்னர் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சி, நேற்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது.
இருப்பினும், இதனை கொண்டாடுவதற்காக நேற்று பிக் பாஸ் போட்டியாளர்கள் கேக் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில் போன வாரம் ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மாஸாக காரில் வந்து இறங்கி தனது அம்மா அப்பா நெருங்கிய நண்பர்களை கட்டியணைக்கும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.