அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில், அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை சேர்த்துக்கொள்ள கூடாது என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை தென் மாகாண ஆளுநர் விலி கமகேவினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சுற்றறிகையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சட்டம் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.