13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி என்ற சூரி ஸ்டீபன் (வயது 54). இவர் மதபோதகராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே பெற்றோர் வெளியே சென்றதால் வீட்டில் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மதபோதகர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.
தனக்கு நடந்தது குறித்து சிறுமி தாயிடம் கூறினாள். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஊட்டி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 13 வயது சிறுமியை மதபோதகர் பாலியல் சில்மிஷம் செய்ததும், அந்த சிறுமிக்கு உறவினர் முறையில் மதபோதகர் தாத்தா என்பதும் தெரியவந்தது. பொலிசார் சூரி ஸ்டீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.