சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுடன் எல்லை மீறி நடந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைகளைத் தொடர கான்ஸ்டபிளை உடனடியாக கைது செய்யுமாறு கண்டிக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவுகளை பிறப்பித்தார்
53 வயதான, பொலிஸ் கான்ஸ்டபிள் சுய தனிமைப்படுத்தப்பட்டர்களைக் கண்காணிக்க கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இதன்போதே எல்லைமீறி நடந்து கொண்டுள்ளார்.