நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் இலக்கை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி, கொவிட் வைரஸூக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்காது. அதனால் சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.