இதுவரையில் கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் ஒழிப்பு விசேட குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் தொற்றால் உயிரிழப்போரில் ஏறக்குறைய 95 % மானோர் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.