தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகின்ற மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக இவ்வாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வெலிவேரிய பிரதேசத்தில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பின்னர் பொலிஸார் தொலைபேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு குறித்த வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தை திருடிய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.