சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள ஒரு தொகை டீசலுடன் கூடிய ´சூப்பர் ஈஸ்டர்ன்´ எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மாதிரி பரிசோதனைக்கு பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த டீசல் தொகை எரிசக்தி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடனடியாக விநியோகிக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.,