ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெற்கு ஜெர்மனி பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 156க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
உயிர் பலி மேலும் அதிகரிக்கலாம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் மேற்கு ஐரோப்பாவின் ஜேர்மன், பெல்ஜியம் ஆகிய நாடுகளை புரட்டிப் போட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் ஜேர்மனில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்தின் பின்னரும், சுமார் 155 பேர் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.