ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மென்மையாக நடந்து கொள்கின்றார் எனவும், இந்த ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்த்தது கடுமையான தீர்மானங்களை எடுப்பார் என்பதனையே என நீதி அமைச்சர்,ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார கேந்திர நிலையங்களான துறைமுகம், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, பெற்றோலியக் கூட்டுத்தபானம், இலங்கை மின்சாரசபை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் தொழிற்சங்கப் போராட்டம் நடாத்துவதனை தடை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டங்களை நடாத்துவதற்கான அதிகாரத்தை வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பிலேயே இதற்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க போராட்டங்களை நடாத்துவது நியாயமற்றது எனவும் இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு தொழிற்சங்கப் போராட்டம் நடாத்த முடியாது அவ்வாறான ஓர் நிலைமை சில முக்கிய துறைகளில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு தொழிற்சங்கப் போராட்டம் நடாத்தினால் அந்த சேவையை வழங்குவதற்கான துரித படையணி ஒன்றை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் நாச வேலைகளில் ஈடுபடும் தரப்புகளுக்கு எதிராக மென்மையான அணுகுமுறைகளை பின்பற்றக்கூடாது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.