ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (30) காலை சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர். அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு மலர் அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில், தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார