இலங்கையில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 200 ற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் அடுத்த கட்டமாக எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்ப பாடசாலைகள் அனைத்தினதும் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தகுதியுடைய அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசியை பெற்றுகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa2) உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.