சோயாபீன் தயிர் , சோயாபீன் ஊறவைக்கப்பட்டு, ப்யூரி செய்யப்பட்டு, அழுத்தம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
சோயாபீன் தயிர், புரதம் மற்றும் கால்சியத்தின் உயர் மூலம் என்பதால் சோயாபீன் தயிரை அனைவரும் கவலையில்லாமல் உண்ணலாம்.
சோயா தயிர் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தப்படும் நாடுகள்
சீன, ஜப்பானிய, கொரிய, தாய்லாந்து மற்றும் வியட்நாமிய உணவுகள் உட்பட கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய உணவு மூலப்பொருள் சோயாபீன் தயிர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சோயாபீன் தயிரை டோஃபூ என்றும் அழைக்கபடுகின்றது.
ஆரோக்கியமான கொழுப்பு
ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்டுள்ள சோயாபீன் தயிரில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது என்பதோடு, இதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பது மிகப்பெரிய ஆரோக்கிய நன்மையாகும்.
இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சோயாபீன் தயிர், பனீர் மற்றும் பிற பாலாடைக்கட்டிகளுக்கும் சிறந்த மாற்று.
சோயாபீன் தயிர் மூன்று பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.