செவ்வாய்கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
செவ்வாய்கிரகத்தில் மேற்பகுதிக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 7.2 முதல் 12.4 மைல்கள் ( 11.5 முதல் 20 கி.மீ) வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது.
இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.