85 அரசியல்வாதிகள், தமது வீடுகளுக்கு பெற்றுக்கொண்ட குடிநீருக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கின்றது.
குடிநீர் கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளின் பட்டியலை அந்தச் சபை கடந்த வாரம் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
குடிநீர் கட்டணம் செலுத்தாத அரசியல்வாதிகளில் நாடாளுமன்றத்தில் தற்போதிருக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், மற்றும் காலஞ்சென்ற அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளடங்குவர்.
இந்த அரசியல்வாதிகளில் சுமார் 50 பேர் குடிநீர் கட்டணமாக 6 முதல் 10 லட்ச ரூபா வரை செலுத்தவேண்டியுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிக்கின்றது.
நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள் செலுத்தவேண்டிய மொத்த குடிநீர் கட்டணம் சுமார் 70 லட்ச ரூபாவுக்கு அதிகமென தெரியவந்துள்ளது. காலஞ்சென்ற அரசியல்வாதிகளது மொத்த குடிநீர் கட்டணம் 30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமானதெனவும் சபை தெரிவிக்கின்றது.