இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செனல்-04 வெளியிட்ட செய்தி தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று மாலை சென்று முறைப்பாடு செய்யவும் தெரிவிக்கப்படுகின்றது.

