பம்பலப்பிட்டி, லோரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத சூதாட்ட விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 88 இலட்சத்து 500 ரூபா ரொக்கப் பணமும், 2600 யுவானும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.