இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றபோதே இவர் மாயமாகியுள்ளார்.
காணாமல் போனதாக கூறப்படும் தடகள வீரர் கிரஷன் தனஞ்சய, தடகளம் தாண்டுதல் (ஆண்கள்) மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாம்பியன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மெய்வல்லுனர் சங்க செயலாளர் சமன் குமார , காணாமல் போன வீரர் தனிப்பட்ட அமைப்பிதழ் மூலம் அங்கு சென்றதால் நாம் பொறுப்பேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.