கொலம்பியா நாட்டின் தென்மேற்கு நெடுஞ்சாலையில் 30 பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பேருந்து ஒன்று சென்று வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றது.