கணவனால் கைவிடப்பட்டேன், பிள்ளைகளுக்காகச் சாதித்துக் காட்டுவேன் என சுயதொழில் (கேக் டிசைனிங்) மூலம் குடும்பத்தைத் தலைமை தாங்கி வெற்றியை நோக்கிச் செல்லும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கீரிமலை என்னும் இடத்தில் வசித்து வரும் மேகலா ஆகிய நான் நான்கு வருடமாக கேக் தயாரிப்பு மற்றும் கேக் டிசைனிங் செய்து வருகிறேன்.
கணவனை விட்டுப் பிரிந்த நான் எனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருவதனால் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டவே இந்த கேக் டிசைனிங் செய்யத் தொடங்கினேன்.இந்த முயற்சியில் ஒரு படி வளர்ந்துள்ளேன். இருந்தாலும் இந்த முயற்சியில் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஆர்வத்துடன் இதனைச் செய்து வருகிறேன்.
கணவனால் கைவிடப்பட்டு இருக்கிற நான் எனது பிள்ளைகளுக்காக இந்த முயற்சியில் சாதித்துக் காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.