சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு நேற்று (2024.04.02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வைத்தியர்களுக்கு வழங்கப்படும் ‘டெட்’ என்ற போக்குவரத்து கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்று தமக்கும் கிடைக்கவுள்ளதாகவும் அதில் 50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.