பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹொன (Palita Kohona) தெரிவித்தார். அதற்கான உறுதிப்படுத்தல்களை சீன அதிகாரிகள் வழங்கியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடுகளில் $1 பில்லியன் கடன் மற்றும் $1.5 பில்லியன் கடன் வசதி ஆகியவை அடங்கும்.
இந்தப் பணம் எதிர்வரும் ஜூலை மாதம் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என பீஜிங்கிற்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.