சீனாவின் ‘யுவான் வாங் 5’ ஆய்வுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பை சீனா தாமதப்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்ற அச்சத்தில் இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. அதேசமயம் இந்த விவகாரத்தில் , இந்தியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவளித்ததாகவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.