அனுராதபுரம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பின்நிற்கப் போவதில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (16) அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் எல் ரீ ரீ. ஈ உறுப்பினர்களை சந்தித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனை தெரிவித்தார்.
ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே சமகால அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் எதிர்பார்ப்பாகும். எந்த சம்பவமாக இருந்தாலும் சமூக மற்றும் தராதரம் பாராது சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.