சிம்பாப்வே அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இன்று (21) நடைபெற்ற ரி20 உலகக்கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.