கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று சிங்கப்பூரின் kreate Design Pvt. Ltd மற்றும் Colombo lotus tower Management Pvt. Ltd ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.