மொனராகலையில் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அநுராதபுரம் சாலியபுர முகாமில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டரை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.