இரத்தினபுரியில் சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று எம்.பியும் கோப் குழுவின் உறுப்பினராகவும் உள்ள காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாங்கொடை, மிரிஸ்ஸாவத்தை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு மேலே உள்ள வீதியில் லொறி நிறுத்திவிட்டு, சாரதி வீட்டை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்னர் குறித்த இடத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சில நிமிடங்களுக்கு முன்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
எனினும் இந்த விபத்தில் உறுப்பினரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.