சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்ற உறுதியான முடிவு எதனையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சரவையின் பேச்சாளர் ரமேஸ் பத்திரன இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை எப்போதுமே சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி அமைப்புக்களுடன் திறந்தநிலை கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
ஏற்கனவே கடந்த 50வருடக்காலப்பகுதியில் இலங்கை 29 தடவைகளாக சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மற்றும் கடன் உதவியை பெற்றுள்ளது.
எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்ற கடுமையான தீர்மானம் எதனையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டு;ம் என்று பல தரப்புக்களும் கோருகின்ற நிலையிலேயே அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.