சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாளைய தினம் (11.05.2023) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
நாளை முதல் (23.05.2023)ஆம் திகதி வரையில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது,
சர்வதேச நாணய நிதி கடன் தொடர்பிலான முதலாவது மீளாய்வு இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், பிரதிநிதிகள் வழமையான கலந்தாலோசனைகளுக்காக இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பணிப்பாளர் கிருஸ்ணா சிறினிவாசனும் இந்த பிரதிநிதிகளுடன் இலங்கை விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.