சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வௌியிடப்படவில்லை என துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் இலங்கை கடப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக கடற்படையின் தரவுகள் உள்ளடங்கிய ´பீல்ட்மேன்´ இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
´சொய்யோ எக்ஸ்பேளர்´ எனும் கப்பல் ஹம்பாந்தோட்ட கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கப்பல் எந்த துறைமுகத்தில் இருந்து பயணித்தது என்பது தொடர்பிர் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
சர்ச்சைக்குரிய இந்த கப்பல் தொடர்பில் துறைமுக அதிகாரிகள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாக துறைமுக மாஸ்டர் கெப்டன் நிர்மால் த சில்வா தெரிவித்துள்ளார்.