நீரிழிவு நோய் என்பது இது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். இதில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம் நீரிழிவு நோயாளிகள் சரியாக சாப்பிடுவதைத் தவிர நடைப்பயிற்சி செய்வதன் மூலமும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
எனவே சர்க்கரை நோயாளிகள் அதிகமாக நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சைகளைத் தவிர, உடற்பயிற்சி நடைபயிற்சி மிகவும் முக்கியமானது.
நடைப்பயிற்சி பலன்கள்
நீரிழிவு நோயாளிகள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.
சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
ஒரு நபர் வேகமாக நடக்கும்போது, அவரது கணையத்தின் செல்கள் வேகமாக வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் தினமும் 10,000 படிகள் அல்லது குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
உங்களால் ஒரு நேரத்தில் அரை மணி நேரம் நடக்க முடியாவிட்டால் நாள் முழுவதும் காலை, மதியம் மற்றும் மாலை என 10-10 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
இது தவிர உணவைக் கட்டுப்படுத்த வேண்டும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவைத் தவிர்க்கவும் ஏனெனில் அவற்றை ஜீரணிக்க அதிகமாக நடக்க வேண்டும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியை நீங்கள் செய்யும்போது உங்கள் இதயம் சிறிது வேகமாகத் துடிக்கிறது மற்றும் கொஞ்சம் கடினமாக மூச்சு விடுகிறது., தசைகள் இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரையான குளுக்கோஸை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.
காலப்போக்கில், இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது உங்கள் உடலில் உள்ள இன்சுலினை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்த மணிநேரங்களுக்குப் பிறகு உடலில் அதன் நன்மைகள் எதிரொலிக்கும்.
இரத்த சர்க்கரை
கடுமையான உடற்பயிற்சி சில நேரங்களில் இரத்த சர்க்கரையை தற்காலிகமாக அதிகரிக்கலாம். மிகவும் தீவிரமான உடற்பயிற்சியானது உடலில் அதிக மன அழுத்த ஹார்மோன்களை உருவாக்கும், இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
முதன்முதலாக நடை பயிற்சியை தொடங்குபவர்கள் வாரத்தில் சில நாட்கள் என்ற அளவில் ஆரம்பித்து, வாரத்தில் மூன்று நாட்கள் 10 நிமிட நடைப்பயிற்சி என அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக அதிர்கரிக்கலாம். ஒவ்வொரு நாளும் 5 அல்லது 10 நிமிடம் என 30 நிமிட மிதமான வேகத்தில் நடைபெயர்ச்சி செய்வது பொதுவாக போதுமானதாக இருக்கும்.
வாக்கிங் செல்லும் ஒவ்வொரு முறையும், நீங்கள் எவ்வளவு நேரம் நடந்தீர்கள் என்பதையும், நடப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் இரத்த சர்க்கரை அளவு எவ்வளவு என்பதை குறித்து வைப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் காலப்போக்கில் இது உங்கள் இரத்த சர்க்கரையை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.