உதவி வழங்கியவர்கள்: உதவும் இதயங்கள் நிறுவனத்தின் செயலாளர் மற்றும் சரஸ் சேவைகள் யெர்மேனி. திரு திருமதி மணிமாறன் மதுரிகா
நிதி உதவி: 125000,00
இடம்: புத்தூர்
திரு திருமதி மணிமாறன் மதுரிகா தம்பதியினர்களின் நான்காவது திருமண நாள் அன்று. நேரடியாகச் சென்று பார்வையிட்டு வாக்குறுதியளித்திருந்தனர் 5 உறுப்பினர்களைக்கொண்ட பெண்தலைமைத்துவ குடும்பம் மலசல கூட வசதியின்றி வாழ்ந்து வந்தனர் (உண்மையில் மலசல கூடம் இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதனை கருத்தில் கொண்டு அவர்களின் அவல நிலையினை திரு மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான மலசல கூடத்தினை தனது சொந்த நிதியில் கட்டி இன்று அவர்களின் பாவனைக்கு வழங்கி வைத்துள்ளார். அந்த வகையில் திரு திருமதி மணிமாறன் மதுரிகா தம்பதியினர்கள் பதினாறுவகைச் செல்வங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அத்துடன் எந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த சுரேஷ் மற்றும் எமது உறுப்பினர் திரு சஜிவன் மற்றும் அனைவருக்கும் நன்றி உதவும் இதயங்கள் நிறுவனம் Germany