ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது அதே பகுதியில் வசித்துவந்த 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உந்துருளியொன்றில் வந்த இருவர் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை களுத்துறை பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த தாக்குதலில் களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.