கடுவெல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் தனது சிறியதாயால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதேசவாசிகள் எடுத்த நடவடிக்கை
அந்த சிறுமியின் சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதற்கமைய சிறுமியைத் தாக்கிய 29 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.