தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார்.
இவர் தனது மனைவிக்கு அனுப்பி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய பதில் நீதிவான் ஜெனி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று (15) நீதிமன்றத்தில் முன்னிலை படுத்திய பொலிஸார் சந்தேக நபர் தனது பிள்ளையைக் கொல்ல முயற்சிப்பதாகத் தெரிகிறது என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த தனது மனைவியை அழைப்பிக்கும் நோக்கில் அவர் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும், மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தந்தையின் இந்தச் செயலால் அவரது மகன் பயந்த நிலையில் காணப்படுவதனை குறித்த காணொளி காட்டியுள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்த குளியாப்பிட்டிய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மகனை பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
5 வயதான அவரது மகன் தந்தையுடன் செல்ல மறுத்துள்ளதுடன் தாய் வரும் வரை தனது உறவினருடன் செல்ல விரும்புவதாகவும் குழந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.