அமெரிக்க டொலர்களை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து குறித்த இருவரையும் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.