முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
விசமிகள் செயல்
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள உடையார் கட்டு சந்திக்க அருகாமையில் அமைந்துள்ள ATM இயந்திரத்தின் கண்ணாடியை நேற்று இரவு விசமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் வங்கி முகாமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
இதனையடுத்து ATM இயந்திர பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.