ஹலவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதியதில்13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (2024.01.04) நீர்கொழும்பு கட்டுவா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாயும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.