திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனைசெய்தவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆலய கடை தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்று கிழமை குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் ஒரு போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.