ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 8 ரயில்கள் இன்றையதினம் (07-06-2024) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள், ரயில் சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, ரயில் சாரதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.