முல்லைத்தீவு – கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர், அக்கடற்படைத்தளத்தில் உள்ள அவரது படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (16-04-2023) காலை இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ச்டலமாக மீட்கப்பட்டவர் பதுளையைச் சேர்ந்த டபிள்யு.எம்.எல்.பி. வணசிங்க என்ற கடற்படை வீரர் ஆவார்.
இவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் புலனாய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் (15-04-2023) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இன்று (17-04-2023) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் மாரடைப்பு காணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.