பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் அண்மையில் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஒன்பதாவது பெரஹெர நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர்களை சந்தித்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் குழுவொன்று நேற்று காலை ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 16ஆம் திகதி கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஒன்பதாவது பெரஹராவின் இறுதிப் பெரஹராவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், விகாரையின் முக்கியப் பங்களிப்பாளரான ரஞ்சித் விஜேவர்தன மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எப்படியிருப்பினும் குறித்த ஆங்கில ஊடகத்தின் செய்தியை ஐக்கிய தேசிய கட்சி நிராகரித்துள்ளது.