விஷேட கடமைகளுக்கு என, மேல் மாகாணத்துக்கு வெளியே இருந்து 1000 பொலிசார் நாளை கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தின் உள்ளக தகவல்கள் இதனை வெளிப்படுத்தின. இவ்வாறு அழைக்கப்பட்டுள்ள 1000 பொலிஸாரும் மே 17 முதல் 20 ஆம் திகதிவரையில் கொழும்பில் விஷேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வடக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும், பொலிஸ் கல்லூரிகளில் இருந்தும் இந்த பொலிஸார் இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள், வரும் போது பொலிஸ் அடையாள அட்டை, சட்டைப் பை புத்தகம், மழையின் போது அணியும் அங்கி, பாதுகாப்பு தலைக் கவசம் உள்ளிட்டவையை உடன் எடுத்துவருமாறு கோரப்பட்டுள்ளனர்.
இவர்களை 16 ஆம் திகதி, மேல் மாகாணத்தின் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் உள்ள மிரிஹானை மைதானத்தில் வந்து கடமைகளுக்கு ஆஜராவதை உறுதிப் படுத்துமாறு கட்டளை இடப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது