கொழும்பு தெஹிவளை மேம்பாலத்தில் நேற்றிரவு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, காரில் பயணித்த நபர் வெளியே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.
தெஹிவளை, கலகிஸ்ஸ மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன.
காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.