கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (4) பிற்பகல் 2:00 மணி முதல் நாளை (5) பிற்பகல் 2:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் 4 வரை, கொழும்பு 7 முதல் 11 வரை, கடுவெல நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.