கொழும்பு பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் அந்தரங்கத்தை இளவயதை கடந்த நபர் காணொளி எடுத்த நிலையில் பேருந்து பயணிகளால் நைய்யப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை ஊடாக பயணிக்கும் கிரிபொத்கொட – அங்குலான செல்லும் வழித்தடம் 154 இலக்க பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்தில் காலை வேளை பல்கலைக்கழகம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களும் பயணிக்கும் தினசரி பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் காலை நபர் ஒருவர் பேருந்தில் பெண்ணை தகாத முறையில் காணொளி எடுத்ததை கண்ட அப்பெண் , நபரின் அநாகரீக செயலை கண்டு வெகுண்டெழுந்து சண்டை போட்டுள்ளார்
இதனையடுத்து பயணிகளும் சத்தமிட்டு குறித்த நபரை நையப்புடைத்த நிலையில் தப்பித்தோம் பிழைத்தோம் என அந்தநபர் பாதிவழியில் பேருந்தில் இருந்து குதித்து தப்பிச்சென்றதாக தெரியவருகின்றது.
அதேவேளை குறித்த பேருந்தில் கடந்த சிலதினங்களின் முன்னரும் இப்படியான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பேருந்தில் தினமும் பயணிக்கும் பயணி ஒருவர் விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.