மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு,தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது தீ மிக வேகமாக பரவி வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.