கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய (20) நாள் வர்த்தக நடவடிக்கைகள் 233.97 புள்ளிகள் அதிகரித்து 9,082.33 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
வங்கித் துறையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததன் விளைவாக இந்த பாரிய லாபம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிகரிப்பானது 2.64 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, S&P SL20 குறியீட்டு எண் 65.04 புள்ளிகள் (2.40%) அதிகரித்து இன்று 2,777.78 புள்ளிகளில் நிறைவடைந்தது.
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 98 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.