கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாத்த முல்லை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியிலுள்ள வீடு ஒன்றில் தீ விபத்துச் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, குறித்த வீட்டில் வசித்தவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்தியமையால் தீ விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த தீ விபத்தில் சமையலறையிலுள்ள பொருட்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.
மேலும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி காணப்படுவதால், விறகு அடுப்புக்களை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.